455. மங்களூர்-உடுப்பி மதக்கலவரம்
ஒரிஸாவில் இப்போது தான் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிற நேரத்தில், மங்களூரிலும் உடுப்பியிலும் கலவரம் வெடித்துள்ளது. மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு சில இந்து அமைப்புகள் கலவரத்திற்கு தூபம் போட்டுள்ள செயல் கடுமையான கண்டனத்துக்குரியது. கர்னாடகாவில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பிஜேபி இது போன்ற கலவரங்களை வேடிக்கை பார்க்காமல், முளையிலே கிள்ளி எறிய வேண்டும். தீவிர இந்துத்வா முத்திரை குத்தப்படுவதால் பிரச்சினைகள் அதிகமாகின்றனவே அன்றி சுமுகமான தீர்வுகள் பிறப்பதில்லை !
New Life Fellowship என்ற கிறித்துவ அமைப்பு, இந்துக் கடவுளர்களை சிறுமைப்படுத்தும் விதத்தில் பிரசுரங்கள் தயாரித்து விநியோகித்தது தான் தேவலாயங்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு மூல காரணம் என்று சில இந்து அமைப்புகள் கூறுகின்றன. எது எப்படியிருந்தாலும், சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது சரியாகாது, இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கு கண்டனத்துக்குரியது !
கர்னாடகா அரசு சற்று சுதாரித்துக் கொண்டு பலரை கைது செய்துள்ளது. போலீஸ் பந்தோபஸ்த்தையும் அதிகரித்துள்ளது. முதல்வர் எட்டியூரப்பா, சேதம் அடைந்துள்ள தேவாலயங்களை சீரமைக்கும் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று கூறியுள்ளார். உருப்படாத காங்கிரஸ் மற்றும் தேவகௌடாவின் ஜனதா தள தலைவர்கள், கர்னாடகாவின் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பேசியிருக்கின்றனர். சிவராஜ் பாட்டில் போன்ற ஒரு மத்திய உள்துறை அமைச்சரை வைத்துக் கொண்டு வக்கற்ற காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை திமிர் ஆகாது !!!
எ.அ.பாலா
6 மறுமொழிகள்:
Test !
இந்த இந்து தீவிரவாத கும்பல்களுக்கு என்ன வேண்டுமே தெரியவில்லை. அமைதியான முறையில் தனது கொள்கையினை பரப்புவதற்கு கிருத்துவர்களுக்கு முழு உரிமை உண்டு.
மேலும் கிருத்துவர்கள் குறை சொல்ல முடியாத அளவில் நாட்டுப் பற்று கொண்டவர்கள்.அவர்கள் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா கிரிக்கட்டில் இந்தியாவை தோற்கடித்தால் பட்டாசு வெடிப்பதில்லை. சக கிருத்துவர் என்பதினால் ஆங்கிலேயப் படையெடுப்பை ஞாயப்படுத்துவதில்லை. எங்களூர் சர்ச்சில் சுத்ந்திர தினத்தன்று இந்தியாவின் சுபிட்சத்திற்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கும்.
//முதல்வர் எட்டியூரப்பா, சேதம் அடைந்துள்ள தேவாலயங்களை சீரமைக்கும் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று கூறியுள்ளார். //
அவருக்கு வேறு வழியில்லை.
அடுத்த தேர்தலில் கிருஸ்டியன் வோட்டு வேண்டுமே
இது தான் மோடிக்கும் எடியூரப்பாவிற்கும் உள்ள வித்தியாசம்
இப்ப புரிகிறதா மோடி மற்றும் பட்நாயகின் தவறு என்ன வென்று
///இது தான் மோடிக்கும் எடியூரப்பாவிற்கும் உள்ள வித்தியாசம்
இப்ப புரிகிறதா மோடி மற்றும் பட்நாயகின் தவறு என்ன வென்று///
Modi had lost the votes or what?
Sankar
கர்நாடகாவில் இதுவரை சட்டம் ஒழுங்கு மட்டும் கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது.. பிஜேபி ஆட்சியில் அதுவும் போச்சு.. எடியூரப்பா சும்மா வாய் சொல்லில் வீரனடிதான்..
தெனாலி, அருண்மொழி, அனானி, பரத்,
வருகைக்கு நன்றி.
என்னளவில், மதப்பிரசாரம் செய்வதற்கு எந்த மதத்தவர்க்கும் முழு உரிமை உண்டு, பிற மதங்களை சிறுமைப்படுத்தாத வகையில் ! மதமாற்றத்தை எதிர்ப்பவர் யாராயினும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின் தங்கி இருப்பவர்களுக்கு அனுசரணையோடு உதவி செய்ய முயற்சிகள் எடுக்கலாமே ?
எ.அ.பாலா
Post a Comment